பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா?

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

கடந்த நூறு நாட்களுக்கு மேல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முடிவடைய போகிறது என்பதும் உலக நாயகன் கமலஹாசன் நாளை மறுநாள் டைட்டில் வின்னர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 இறுதி போட்டிக்கு விக்ரமன், ஷிவின், அசீம் மற்றும் மைனா ஆகிய நால்வர் தகுதி பெற்றிருந்த நிலையில் இவர்களில் மிட்வீக் எவிக்சனாக மைனா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இறுதிப் போட்டிக்கு மீதம் உள்ள மூன்று போட்டியாளர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற கேள்வி பார்வையாளர்கள் மனதில் எழுந்துள்ளது. ஷிவின், விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய மூன்று பேருக்குமே வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அசீம் தான் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.