புதிய விதிகள், திருநங்கைகள்: களைகட்டப்போகும் பிக்பாஸ் சீசன் 5!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் செட் போடும் பணி முடிந்து விட்டதாகவும், அதேபோல் போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 30 பிரபலங்களிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் யார் என்ற செய்தி கசியும் என்றும் கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள தகவலின்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுனிதா, கனி, தர்ஷா, மற்றும் மைனா ஆகியோர்கள் மட்டுமே விஜய் டிவியில் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு திருநங்கைகள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. ஷகிலாவின் மகள் மிளா மற்றும் பிரபல மாடல் நமீதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் மற்ற நான்கு சீசன் களை விட இந்த சீசன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசப்படுத்தி வரும் பிக்பாஸ் குழுவினர் இந்த சீசனில் என்னென்ன வித்தியாசங்களை கொண்டு வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com