பிக்பாஸ் அக்ஷராவுக்கு அண்ணன் கொடுத்த அன்பு பரிசு… வைரலாகும் புகைப்படம்!

பரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை அக்ஷரா. 80 நாட்களில் எலிமினேட் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேவந்த இவருக்கு, அவருடைய அண்ணன் கொடுத்த அன்பு பரிசு தற்போது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. அந்தப் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டு திறமையாக விளையாடியவர்தான் நடிகை அக்ஷரா. பிக்பாஸ் டாஸ்க் அனைத்திலும் ஆர்வத்துடன் பங்குகொண்ட இவர் 80 நாட்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று வீட்டைவிட்டு வெளியே வந்தார். கூடவே டபுள் எவிக்சன் முறையில் மற்றொரு போட்டியாளரான வருணும் இவருடன் சேர்ந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வருண் மற்றும் அக்ஷராவிற்கு புதிய பட வாய்ப்பு வந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாக நிலையில் நடிகை அக்ஷரா, சகப் போட்டியாளர்களான வருண் மற்றும் சஞ்சீவை நேரில் சந்தித்து தனது பாசத்தைப் பரிமாறிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அக்ஷராவிற்கு அவருடைய அண்ணன் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் காரின் மீது அக்ஷரா அமர்ந்திருக்கும் புகைப்படம்தான் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது. பென்ஸ் வகை சொகுசு காரான அதன் விலை ரூ.1 கோடி என்றும் சொல்லப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு எலிமினேட் முறையில் வெளியேவந்த அக்ஷராவிற்கு புதிய கார் மற்றும் புதிய பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

More News

சென்னையில் கிளைமாக்ஸை படமாக்கும் இயக்குனர் விஜய்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விஜய் சமீபத்தில் இயக்கிய 'தலைவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும்

'வலிமை' ரிலீஸ் தேதி குறித்து சற்றுமுன் போனிகபூர் பதிவு செய்த டுவிட்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் அதன் பின்னரும் படக்குழுவினர் ஜனவரி 13 என்ற தேதியை

பிக்பாஸ் வீட்டிற்கு பணப்பெட்டியுடன் வந்த சரத்குமார்: வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலக விரும்புபவர்கள் வெளியேறலாம் என்று அறிவிப்பார்

'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான ஐட்டம் பாடல்: ஆடிய தமிழ் நடிகை யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடி இருந்தார்

நீண்ட இடைவெளிக்கு பின்... டைட்டில் வின்னரை சந்தித்த நடிகர் ஜெய்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தன்னுடன் நடித்த நடிகையை சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை நடிகர் ஜெய் செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது