எவிக்சனில் இருந்து தப்பித்த மீரா! சிக்கினாரா சாக்சி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இந்த வார நாமினேஷனில் அபிராமி, கவின், சேரன், சரவணன், மீராமிதுன் மற்றும் சாக்சி ஆகியோர் உள்ளனர். இந்த வார டாஸ்க்கில் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்திய மீராமிதுன் மீது பார்வையாளர்கள் கடும் கோபத்தில் இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால் எதிர்பாராததை எதிர்பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் சாக்சி வெளியேறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் கூறியதை புரிந்து கொள்ளாமல் அவரிடமே சண்டைக்கு செல்லும் சாக்சி மீது பார்வையாளர்கள் பலர் வெறுப்படைந்துள்ளதால் நேற்று ஒரே நாளில் சாக்சிக்கு மிகக்குறைவாக வாக்கு விழுந்திருப்பதாகவும், இதனை அடுத்து அவர் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த வார கடிகார டாஸ்க்கில் ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி, சாக்சியை பஞ்சாயத்து பண்ன சொல்லி அவர் பெயரை டேமேஜ் செய்த மீரா, இந்த வார டாஸ்க்கிலும் எவிக்சனில் இருந்து தான் தப்பிக்க சாக்சி மீது மொழிப்பிரச்சனையை கொண்டு வந்தார் மீரா. அது மிகச்சரியாக ஒர்க்-அவுட் ஆகி, சாக்சிக்கு எதிராக கவினையும் பேச வைத்தது. இதனால் கவின் -சாக்சிக்கு இடையே சண்டை வந்தது. மொத்தத்தில் மீரா, எவிக்சனில் இருந்து தப்பிக்க செய்யும் தந்திரங்கள் இன்று வரை வேலை செய்து வருவதால் அவர் தொடர்ந்து எவிக்சனில் இருந்து தப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com