விமான பைலட்டை திருமணம் செய்த பிக்பாஸ் புகழ் நடிகை!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 1' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் வைஷ்ணவி. இவர் கடந்த சில ஆண்டுகளாக அஞ்சன் என்ற விமான பைலட்டை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இருதரப்பு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தனது திருமணம் குறித்த புகைப்படங்களை வைஷ்ணவி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பின்னர் தனது திருமணம் குறித்து அவர் கூறியதாவது:

மூன்று வருடங்கள் நானும் அஞ்சனும் ஒருவரை ஒருவர் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். இந்த திருமணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதமே வைஷ்ணவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்து இவரைத்தான் திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.