ஷிவினுக்கு மொட்டை அடிக்க வேண்டுமாம்... சொன்னது யாரு பாருங்க!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவினுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என சக போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது உள்ள போட்டியாளர்களில் மிகவும் சிறப்பாக விளையாடி வருவது விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவர் மட்டுமே என்றும் இருவரும் கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
ஷிவின் நேர்மையாகவும் மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்லும் கேரக்டராக இருப்பதால் அவரை கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே ஒரிரு முறை ஷிவனை அவமரியாதை செய்யும் வகையில் பேசிய அசீம், தற்போது மீண்டும் ஒரு முறை அவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, கதிரவன் மற்றும் மணிகண்டனிடம் அசீம் கூறும்போது, ‘பேசாமல் ஷிவினுக்கு மொட்டையடித்து விடுவோமா? என்று கூறுகிறார். அவரது இந்த பேச்சுக்கு கதிரவன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருமே பதில் கூறாமல் அமைதியாக உள்ளனர்.
ஒரு திருநங்கை போட்டியாளரை மொட்டை அடிக்க வேண்டும் என அநாகரிகமாக பேசிய அசீமுக்கு பார்வையாளர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Give some respect to her #azeem ????#biggbosstamil6 #biggbosstamil #shivin pic.twitter.com/Z7eEZI9O9H
— Thomas Shelby (@Aug180820) November 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments