நான் இன்னும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் மதுமிதா
- IndiaGlitz, [Monday,July 01 2019]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் அபிராமி-மிராமிதுன் மோதல் பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தந்த நிலையில் இந்த வாரத்திற்கான கண்டெண்ட் 'தமிழ்ப்பொண்ணு' கலாச்சாரம் என பிக்பாஸ் திரைக்கதையில் பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அனேகமாக இந்த ஒரு கண்டெண்ட் இந்த வாரம் முழுக்க ஓடும் என தெரிகிறது
மதுமிதா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியதும், மற்ற மாநில பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமான ஒன்றே அல்ல. பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் இதேபோன்ற ஒரு பிரச்சனை வந்தபோது ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். ஆனால் இந்த முறை 'தமிழ்ப்பொண்ணு' என்று கூறியதற்கு தமிழ்ப்பெண்ணான வனிதாவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கவினும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகிய இன்றைய மூன்றாம் புரமோ வீடியோவில், 'கரெக்டாக இருந்தாலே இந்த ஊர்ல பிரச்சனைதான், உலகத்திலேயே நியாயமானவன் நான் தான் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று கவின் கூறுகிறார்.
இன்னொருபுறம் மதுமிதா, 'என்னோட பார்வை தவறாக இருக்குது மீதி எல்லாரும் கரெக்டாக இருக்காங்க, எல்லாரும் கேமை நல்லா விளையாடுறாங்க நான் தான் இன்னும் கேமுக்குள்ளேயே வராம வெளிய நின்னு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்' என்று தனியே புலம்புகிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo3 #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/7J8y8y3iVy
— Vijay Television (@vijaytelevision) July 1, 2019