அசீம் காண்டம் கேட்டது உண்மையா? ரசிகரின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த ஷெரினா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒரு வழியாக 105 வது நாளில் நேற்று முடிவுக்கு வந்தது, அசீம் தான் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார், அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் அறிந்ததே. விக்ரமனுக்கு இரண்டாவது இடமும் ஷிவினுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இதுவரை ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்களில் இந்த சீசன் தான் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீசன் என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஷெரினா, மீண்டும் விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது அசீம் அவரிடம் காண்டம் கேட்டதாக ஒரு வீடியோ வைரலானது. ஆனால் அவர் காண்டம் கேட்கவில்லை, சிகரெட் தான் கேட்டார் என்றும் சிலர் அது அந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஷெரினாவிடம், ‘நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்றபோது அசீம் உங்களிடம் காண்டம் கேட்டாரா? இப்படி ஒரு வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது, உங்கள் விளக்கம் என்ன? என்று கேட்டிருந்தார்.
அதற்கு செரீனா பதிலளித்தபோது, ‘நானும் அந்த வீடியோவை பார்த்தேன், அசீம் என்னிடம் சிகரெட் தான் கேட்டார், காண்டம் கேட்கவில்லை’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.
Worst Behaviour Az. No words just 🤮🤮🤮#ClownAzeem #CringeAzeem #BoomerUncleAzeem #AbuserAzeem #Azeem #BiggBossTamil6 #Vikraman #vikramanarmy #vikraman𓃵 #vaathivikraman𓃵 #AramVellum #Shivin #Rachitha #Sherina #vjmaheswari #VJKathiravan #Myna #ADK #Amudhavanan #BiggBossTamil pic.twitter.com/9IKYlwMKjy
— Nazeer (@Nazeer_off) January 14, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com