மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அபிஷேக்: இதுதான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அபிஷேக் உள்ளே செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராகிய அபிஷேக் முதல் நாளில் இருந்தே மற்ற போட்டியாளர்களை டாமினேட் செய்தார் என்பதும் அவர் அனைத்து போட்டியாளர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டுமென செய்த பல தந்திரங்கள் சக போட்டியாளர்கள் சிலருக்கு திருப்தியை ஏற்படுத்தினாலும் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் இரண்டாவது போட்டியாளராக அவர் வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே அவர் பார்வையாளர்களிடம் கெட்ட பெயரை வாங்கி விட்டார் என்பதும் பிக்பாஸையே அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பிக்பாஸ் குழுவினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் வெளியேற்றப்படுவதற்கு குறைந்த வாக்குகள் மட்டும் காரணம் இல்லை என்றும் ஒரு வதந்தி இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே பரபரப்பு எதுவும் இல்லாமல் இருப்பதை அடுத்து கண்டெண்ட் கிங் அபிஷேக்கை மீண்டும் உள்ளே அனுப்ப பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் மக்களால் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் உள்ளே சென்றது போல், அபிஷேக் இந்த சீசனில் மீண்டும் உள்ளே செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அபிஷேக் பிக்பாஸ் வீட்டுக்குள் கூடிய விரைவில் உள்ளே செல்வார் என்றும் அவர் சென்றவுடன் மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு ஏற்படுவது மட்டுமின்றி ஒருவித குழப்ப நிலையை உண்டாக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் இதன்மூலம் நிகழ்ச்சியை சுவாரஸ்யபடுத்த கண்டெண்ட் கிடைக்கும் என்றும் அதற்காகவே பிக்பாஸ் குழுவினர்கள் அபிஷேக்கை உள்ளே அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments