close
Choose your channels

உங்க நேர்மைக்கு கிடைத்த பரிசு: ஓவியாவுக்கு கமல் பாராட்டு

Sunday, July 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நேற்று முன் தினம் அனைத்து பங்கேற்பாளர்களும் ஒன்று சேர்ந்த்து ஓவியாவை விரட்ட சதித்திட்டம் தீட்டினார்கள். ஆனால் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மமே வெல்லும் என்ற மொழிக்கேற்ப நேற்று ஓவியா நிரபராதி என்பதை குறும்படம் மூலம் போட்டுக்காட்டி ஜூலியின் பச்சோந்திதனத்தை கமல் அம்பலப்படுத்தினார்.

நேற்று கமலிடம் ஓவியாவை பற்றி அனனத்து பங்கேற்பாளர்களும் புகார் கூறிய நிலையில் அவர் ஒரு குறும்படத்தை ஒளிபரப்பினார். அதில் ஜூலிதான் மாறி மாறி பேசினார் என்பதும், சின்ன பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்கியுள்ளார் என்பதும் ஓவியா அவருக்கு ஆறுதல் மட்டுமே கூறியுள்ளார் என்பதும், யாரையும் அவர் புறம்கூறவில்லை என்பதும் புரிய வந்தது.

இதனால் அனைத்து பங்கேற்பாளர்களும் ஜூலியின் சுயரூபத்தை புரிந்து கொண்டனர். ஓவியா உண்மையானவர் தான் என்பதை காயத்ரி, நமீதா உள்பட அனைவரும் கமல் முன் ஒப்புக்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஓவியாவிடம் 'இது உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு' என்று பாராட்டியதோடு, இருப்பினும் இந்த பாராட்டை நீங்கள் தலையில் ஏற்றி கொள்ளாமல் முடிந்தவரை மற்றவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்' என்று அறிவுரை கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment