எல்லாமே ஸ்கிரிப்ட் படிதான் உள்ளே நடக்குது! பிக்பாஸ் உண்மையை பிட்டு வைத்த கஞ்சாகருப்பு

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்த முதல் நாளே சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சி உண்மையான ரியாலிட்டி ஷோ இல்லை, இதுவொரு ஸ்கிரிப்ட் எழுதப்பட்ட சீரியல் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கூறினர். நாள் ஆக ஆக இது உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சமீபத்தில் வெளியேறிய நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, இதுவொரு ஸ்க்ரிப்ட் நிகழ்ச்சிதான் என்ற உண்மையை தெரியாமல் பேட்டி ஒன்றி உளறிவிட்டதாக கருதப்படுகிறது.

தனியார் எப்.எம் வானொலி பேட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்டபோது, 'நாடோடிகள் படத்தில் நீங்களும் பரணியும் நன்றாகத்தான் நடித்தீர்கள், பிக்பாஸ் படத்தில் மட்டும் ஏன் சண்டை போட்டீர்கள், ஸ்க்ரிப்ட் நன்றாக இல்லையா? என்ற கேள்விக்கு ஸ்கிரிப்ட் எல்லாம் சரியாகத்தான் கொடுத்தார்கள், நடிப்பதில் தான் எல்லோருக்கும் கொஞ்சம் வீக்னஸ்' என்று கூறியுள்ளார். அப்ப உள்ளே நடிச்சுகிட்டுத்தான் இருந்தீங்களா? என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று பதிலளித்தார்.

இந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தரை லோக்கலாக இறங்கிய காயத்ரி. தராதரத்துடன் ஒதுங்கிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒருவாரம் மட்டுமே டீசண்டாக இருந்த காயத்ரி அதன்பின்னர் அவருடைய சுயரூபம் வெளிப்படும் வகையில் நடந்து கொண்டு அனைவரின் வெறுப்பிற்கும் ஆளாகி வருகிறார்...

தனுஷின் 'விஐபி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்...

தல அஜித்தின் விவேகம்: கபிலன் வைரமுத்துவின் 'காதலாடா' பாடல் வரிகள்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற 'சர்வைவா' மற்றும் 'தலை விடுதலை' ஆகிய பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளிவந்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது...

ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா! ஒருமையில் பேசிய அமைச்சருக்கு கமலின் நக்கல் பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசின் ஊழல் குறித்து பேசி வருவதால் அவரை மிரட்டும் தொனியிலும், ஒருமையிலும் ஒருசில அமைச்சர்கள் பேசி வந்தனர். இதற்கு கமல்ஹாசன் ரசிகர்களும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கமல் தனக்கே உரிய நக்கலுடன் இதற்கு பதிலளித்துள்ளார்...

முடியாவிட்டால் விலகி கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் ஆலோசனை

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை தனது டுவிட்டர் மூலமும் பேட்டியின் மூலமும் கூறி வருகிறார்...