ஓவியா காதல்: ஆரவ்வை கேள்விகளால் துளைக்கும் ஆர்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகிய இருவருக்கும் மட்டுமே வீட்டின் உள்ளே என்ன நடக்கின்றது என்பதும், வெளியே என்ன நடக்கின்றது என்பதும் தெரியும். குறிப்பாக ஆரவ் மீது ஓவியா இன்னும் காதலுடன் உள்ளார் என்பது தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் ஓவியாவின் காதல் குறித்து ஆரவ்வை ஆர்த்தி கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கிறார்.
நீங்க ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று வெளியே செல்லும் போது உங்களை ஓவியா வரவேற்க வாசலில் இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று ஆர்த்தி கேட்டபோது 'மகிழ்ச்சியாக' இருக்கும் என்று ஆரவ் கூறினார்.
அந்த சமயத்தில் ஓவியா உங்களிடம் புரபோஸ் செய்தால் உங்கள் ரியாக்சன் எப்படி இருக்கும் என்ற ஆர்த்தியின் கேள்விக்கு 'பெற்றோர்களிடம் நான் கலந்து பேசி பதில் சொல்வேன்' என்று கூறினார்.
அப்போது காஜல், 'அப்பா அம்மாவும் சம்மதித்துவிட்டால் என்ன செய்வீர்கள்' என்று கேட்க அதற்கு ஆரவ் அமைதியாக பதில் சொல்லாமல் உள்ளார்.
தன்னுடைய காதல் உண்மையானது என்றும், அது தோற்கவே தோற்காது என்று ஓவியா இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில் ஆரவ்வின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
கேள்விகளால் துளைக்கப்படும் ஆரவ்! @Vivo_India #BiggBossTamil #VivoBiggBoss pic.twitter.com/x3MRzYYsWl
— Vijay Television (@vijaytelevision) August 30, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments