ஓவியா காதல்: ஆரவ்வை கேள்விகளால் துளைக்கும் ஆர்த்தி

  • IndiaGlitz, [Wednesday,August 30 2017]

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகிய இருவருக்கும் மட்டுமே வீட்டின் உள்ளே என்ன நடக்கின்றது என்பதும், வெளியே என்ன நடக்கின்றது என்பதும் தெரியும். குறிப்பாக ஆரவ் மீது ஓவியா இன்னும் காதலுடன் உள்ளார் என்பது தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் ஓவியாவின் காதல் குறித்து ஆரவ்வை ஆர்த்தி கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கிறார்.

நீங்க ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று வெளியே செல்லும் போது உங்களை ஓவியா வரவேற்க வாசலில் இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று ஆர்த்தி கேட்டபோது 'மகிழ்ச்சியாக' இருக்கும் என்று ஆரவ் கூறினார்.

அந்த சமயத்தில் ஓவியா உங்களிடம் புரபோஸ் செய்தால் உங்கள் ரியாக்சன் எப்படி இருக்கும் என்ற ஆர்த்தியின் கேள்விக்கு 'பெற்றோர்களிடம் நான் கலந்து பேசி பதில் சொல்வேன்' என்று கூறினார்.

அப்போது காஜல், 'அப்பா அம்மாவும் சம்மதித்துவிட்டால் என்ன செய்வீர்கள்' என்று கேட்க அதற்கு ஆரவ் அமைதியாக பதில் சொல்லாமல் உள்ளார்.

தன்னுடைய காதல் உண்மையானது என்றும், அது தோற்கவே தோற்காது என்று ஓவியா இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில் ஆரவ்வின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

More News

மும்பை வெள்ளம் குறித்து மாதவன் கூறியது என்ன?

கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது..

'விவேகம்' ரிலீசுக்கு பின்னர் அஜித்-சிவா சந்திப்பில் நடந்தது என்ன?

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

விஷாலுக்கு தலைவர் ஆகும் தகுதி உள்ளது. டிடிவி தினகரன்

அதிமுக அணிகளின் ஒன்றை வழிநடத்தி வரும் தினகரன் அரசியல் பரபரப்பில் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவரை சந்தித்த நடிகர் விஷால், தனது சகோதரியின் திருமணத்திற்கு வருகை தரும்படி கேட்டுக்கொண்டதோடு அழைப்பிதழை நேரில் கொடுத்தார்.

விஜய் ஒரு அற்புதமான மேஜிக்மேன்: மெர்சல் மேஜிக்மேன் கருத்து

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் அவர் இதுவரை ஏற்காத மேஜிக்மேன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

ஆரவ்-ஜூலி காதலை அம்பலப்படுத்திய ஆர்த்தி

பிக்பாஸ் வீட்டில் உள்ள பங்கேற்பாளர்களில் ஜூலிக்கும் ஆர்த்திக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகாது....