அப்புறம் மக்கள் வாக்களிப்புக்கு என்ன மரியாதை பிக்பாஸ்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஒருவாரமாக பெரும்பாலானோர் பார்ப்பதில்லை என்றாலும் ஒருசிலர் அரைகுறையாக பார்த்து வருகின்றனர். அதேபோல் இந்த வாரம் ரைசாவை தவிர அனைவரும் எவிக்சனில் இருக்கின்றனர். இந்த வாரம் வாக்களிப்பதில் யாருக்கும் ஆர்வம் இல்லை என்றாலும் ஓவியாவை டார்ச்சர் செய்த காயத்ரி இந்த வாரம் எவிக்சனில் சிக்கியிருப்பதால் அவர் வெளியேற்றுவதற்காக மற்ற ஆறு பேர்களுக்கும் வாக்களித்து வந்தனர்.
காயத்ரி மற்றும் சக்திக்கு ஆகிய இருவருக்கும் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், இதனால் இருவரில் ஒருவர் வெளியேறும் வாய்ப்பு உண்டு என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் உறுதியாக நம்பினர்.
இந்த நிலையில் திடீரென நேற்று பிக்பாஸ் ஒரு டாஸ்க் வைத்தார். கன்ஃபெக்ஷன் அறையில் அனைவருக்கும் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் காயத்ரி மட்டுமே ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதிலை கூறியதால் அவர் இந்த வார எவிக்சனில் இருந்து விடுபடுகிறார் என்ற அறிவிப்பு பிக்பாஸ் இடமிருந்து வந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வாக்களிப்புக்கு எதிராக பிக்பாஸ் முடிவு இருந்ததால் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காயத்ரியை காப்பாற்ற அவருக்கு மட்டும் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நீங்கள் யாரை வேண்டுமானாலும் காப்பாற்றி கொள்ளுங்கள் பிக்பாஸ், இனி பிக்பாஸ் நிகழ்ச்சி எங்களுக்கு தேவையில்லை என்பதே பலரது எண்ணங்களாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout