நான் உன்னைவிட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்: ஓவியாவிடம் காயத்ரி

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து வெளிவரும் புரமோ வீடியோ அன்றைய நாள் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விடுவதாய் உள்ளது. அதிலும் குறிப்பாக ஓவியாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருப்பதை அறிந்த கொண்ட தொலைக்காட்சி நிர்வாகத்தினர் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையே புரமோ வீடியோவாக போடுவதால் எதிர்பார்ப்பு எகிற வைக்கின்றது.
இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் ஓவியா, ஜூலி மற்றும் காயத்ரி பேசும் வசனங்கள் உள்ளன. காயத்ரி பேசும்போது, 'ஓவியா நான் உன்னிடத்தில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்' என்று கூறுகிறார். இதையும் வழக்கம் போல் புன்சிரிப்புடன் ஓவியா ஏற்று கொள்கிறார்.
அடுத்த பேசிய ஜூலி, 'ஒருத்தரை விமர்சிக்கும்போதோ, அவரிடம் பேசும்போதோ அவர்கள் மனம் புண்படாமல் இருக்கும் வகையில் பேச வேண்டும் என்று அவருடைய குணத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒன்றை கூறுகிறார்.
அடுத்த பேச வந்த ஓவியா, 'ஒரு மணி நேரத்திற்கு முன் வரை பிரச்சனைகள் இருந்தது. ஆனால் இப்போது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு, எந்த பிரச்சனையும் கிடையாது' என்று கூறுவதோடு அந்த புரமோ வீடியோ முடிகிறது. இது எந்த சந்தர்ப்பத்தில் பேசப்பட்டது என்பது இன்றைய நிகழ்ச்சி முழுவதும் ஒளிபரப்பான பின்னர்தான் தெரிய வரும்

More News

ஜூலி கேட்ட அந்த 5 வினாடி வீடியோ இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் பச்சோந்திதனத்தை கமல்ஹாசன் ஒரு குறும்படம் மூலம் அனைவருக்கு தெரியும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டினார்.

ஓவியாகிட்ட இருந்து நான் நிறைய கத்துகிட்டேன்: பிரபல சீனியர் நடிகை

ஓவியா! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சாதாரண நடிகை. ஆனால் இன்று அவர் மக்களின் மனங்களை வென்ற ஒரு சூப்பர் ஸ்டார். ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி என சமூக வலைத்தளங்களின் டிரெண்டே ஓவியாதான்.

சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த செல்வராகவன்

பிரபல நடிகர் சூர்யா நேற்று தனது 42வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார் என்பதையும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர் என்பதையும் பார்த்தோம்

தமிழக அரசியலில் திரைநட்சத்திரங்கள் பெற்ற வெற்றி தோல்விகள்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஐம்பதாண்டு அரசியல் வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் திரையுலகினர்களின் பங்கு மிக அதிகம்.

குண்டர் சட்டத்தை அடுத்து பல்கலையில் இருந்தும் நீக்கப்பட்ட வளர்மதி

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை முதலாம் ஆண்டு மாணவியான வளர்மதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் துண்டு பிரசரம் விநியோகித்ததால் கைது செய்யப்பட்டதாக அ