என பொண்ணுக்கு நடிக்கவே தெரியாது! கதறும் காயத்ரியின் தாயார்

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் காயத்ரியின் சர்ச்சைக்குரிய பேச்சுதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாக் ஆக உள்ளது. ஒரு தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி குறித்து விவாதம் செய்யும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பரபரப்பை எட்டிவிட்டது.
பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சி டிஆர்பிக்காக பங்கேற்பாளர்களை நடிக்க வைப்பதாக குற்றச்சாட்டை கூறி வரும் நிலையில் காயத்ரி ரகுராமின் தாயார் கிரிஜா ரகுராம் அவர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து கூறியதை பார்ப்போம்
காயத்ரி கூறிய சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அந்த டிவி, மியூட் செய்திருக்கலாம். கோபத்தில் ஒரிரண்டு வார்த்தைகள் தவறாக வருவது மனித இயல்பு தான் ஆனால் அதையே அந்த டிவி பெரிதுபடுத்தி டிஆர்பிக்காக விளம்பரம் தேடி கொள்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே நான் காயத்ரியிடம் கூறினேன். அந்த டிவி டிஆர்பிக்காக எதையும் செய்வார்கள், பார்த்து கவனமாக இருந்து கொள் என்று. நான் பயந்த மாதிரியே இப்போது ஆகிவிட்டது.
என் பொண்ணு காயத்ரிக்கு நடிக்கவே தெரியாது. வீட்டில் அவர் ரொம்ப வெகுளியாக, மனதில் தோன்றுவதை பேசுவார். எதையும் மறைக்க தெரியாது. அதேபோல் தான் அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார். ஆனால் அங்கிருப்பவர்கள் அனைவரும் நடிப்பதால், காயத்ரி செய்வது அனைவருக்கும் வித்தியாசமாக உள்ளது. காயத்ரியிடம் எனக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தால், நீயும் நடி என்று தான் அறிவுரை கூறுவேன்
காயத்ரிக்கு ஒரு தலைவிக்கு தேவையான தகுதி உண்டு. மேலும் அவர் ரொம்ப ஸ்டிரிக்டாக இருப்பார். அதேபோல் மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
காயத்ரியை கொடுமைக்காரி என்பது உள்பட பலவிதமாக மிமி கிரியேட்டர்ஸ் எழுதுறாங்க. தயவு செய்து என் மகளை அப்படி எழுதாதீர்கள். அந்த நிகழ்ச்சியில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து கொள்ளுங்கள். கெட்ட விஷயங்களை மறந்துவிடுங்கள். இல்லையா? அந்த நிகழ்ச்சியை பார்க்கவே பார்க்காதீர்கள்
இந்த நிகழ்ச்சியால் கலாச்சார சீர்கேடு வருவதாக கூறுவது வியப்பாக உள்ளது. இதைவிட மோசமான சீரியல்கள் எல்லாம் பல டிவிக்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கெடாத கலாச்சார சீர்கேடா இதில் கெட்டுவிட போகிறது. 15 பேர் நடிக்கிற ஒரு டிராமா என்று எடுத்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை சீரியசாக பார்க்க வேண்டாம்
நான் இதுகுறித்து கமலிடம் பேசலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் கமலை தேவையில்லாமல் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றுதான் பேசவில்லை.
இவ்வாறு காயத்ரியின் தாயார் கூறியுள்ளார்.