இந்த சீசனின் இறுதி போட்டியாளர்கள்.. விக்ரமன், ஷிவின், அசீம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,January 22 2023]

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறப்போகிறது என்பதும் இன்னும் சில நிமிடங்களில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை உலகநாயகன் கமல்ஹாசன் அறிவிப்பார் என்பதும் அவருக்கு 50 லட்ச ரூபாய் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் ஆகிய மூவருக்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. விக்ரமனுக்கு தினமும் ரூ.18,000 சம்பளம் என்று கூறப்படும் நிலையில் அவர் 105 நாட்கள் இந்த வீட்டில் இருந்து உள்ளதால் சுமார் 18 லட்ச ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைக்கும். அதேபோல் ஷிவினுக்கும் ரூ.18000 தான் சம்பளம் என்பதால் அவருக்கும் அதே அளவு தான் தொகை கிடைக்கும். ஆனால் அசீமுக்கு தினமும் 25 ஆயிரம் சம்பளம் எனக் கூறப்படுவதால் அவருக்கு 25 லட்சத்துக்கு அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டைட்டில் வின்னர் பட்டம் பெறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்ற நிலையில் மூவரில் ஒருவருக்கு 50 லட்சம் ரூபாய் அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டில் வின்னர் யார்? அந்த 50 லட்ச ரூபாயை தட்டி செல்வது யார்? என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.