close
Choose your channels

98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஏடிகேவுக்கு சம்பளம் இவ்வளவுதானா?

Tuesday, January 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில் கடைசியாக வெளியேற்றப்பட்ட ஏடிகேவுக்கு கிடைத்துள்ள சம்பளம் குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 வது நாளில் கடைசி போட்டியாளராக ஏடிகே வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து அவருடைய சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏடிகேவுக்கு தினமும் 16 முதல் 19 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை வைத்து பார்க்கும் போது அவருக்கு கிட்டத்தட்ட 16 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மைனா உள்ளிட்டவர்களின் சம்பளம் கோடியை நெருங்கும் நிலையில் 98 நாட்கள் இருந்த ஏடிகேவுக்கு வெறும் 16 லட்சம் தான் சம்பளமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுகிறது. இருப்பினும் ஏடிகே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி உள்ளார். அதனால் அவரது இமேஜ் அதிகரித்துள்ளதால் அவருக்கு திரை உலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.