98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஏடிகேவுக்கு சம்பளம் இவ்வளவுதானா?

  • IndiaGlitz, [Tuesday,January 17 2023]

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில் கடைசியாக வெளியேற்றப்பட்ட ஏடிகேவுக்கு கிடைத்துள்ள சம்பளம் குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 வது நாளில் கடைசி போட்டியாளராக ஏடிகே வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து அவருடைய சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏடிகேவுக்கு தினமும் 16 முதல் 19 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை வைத்து பார்க்கும் போது அவருக்கு கிட்டத்தட்ட 16 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மைனா உள்ளிட்டவர்களின் சம்பளம் கோடியை நெருங்கும் நிலையில் 98 நாட்கள் இருந்த ஏடிகேவுக்கு வெறும் 16 லட்சம் தான் சம்பளமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுகிறது. இருப்பினும் ஏடிகே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி உள்ளார். அதனால் அவரது இமேஜ் அதிகரித்துள்ளதால் அவருக்கு திரை உலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பெண் போட்டியாளரிடம் இந்த சர்ச்சைக்குரிய பொருளையா கேட்டார் அசீம்? வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெற இருக்கும் நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

முன்னணி நடிகர்களின் படங்களை மொத்தமாக அள்ளிய நெட்பிளிக்ஸ் .. இன்னும் என்னென்ன படங்கள் பாருங்கள்!

முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அஜித்தின் 'ஏகே 62' ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' உள்பட 8 படங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளன

இரட்டை குழந்தைகளுடன் விக்கி-நயன் தம்பதிகள்.. செம புகைப்படம்

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான விக்னேஷ் சிவன் - நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் அதன் பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்

தனுஷின் 'வாத்தி' படத்தின் செம அப்டேட்.. கலக்கிய ஜிவி பிரகாஷ்

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கோட் சூட் போட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை!

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோட் சூட் போட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.