டார்ச்சர் தாங்க முடியவில்லை, காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு டேக் செய்து டுவிட் செய்த பிக்பாஸ் டேனியல்

  • IndiaGlitz, [Monday,June 29 2020]

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் டேனியல் போப் என்பதும் அவர் ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் போட்டி முடிந்த ஒரு சில நாட்களில் அவருக்கு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தங்கள் குடும்பத்தை கார்ப்பரேஷன் அலுவல அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக தன்னுடைய டுவிட்டரில் டேனியல் பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தங்களுடைய குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்து வருவதாகவும் அவர்கள் மிகவும் மோசமாக தங்களிடம் நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உடனடியாக இதுகுறித்து தங்களுக்கு உதவி தேவை என்று சென்னை கார்ப்பரேஷன், தமிழக முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல ஊடகங்களுக்கு தனது டுவிட்டை டேக் செய்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்