பிக்பாஸ் கோர்ட்டில் அரசியல்வாதிகளை மறைமுகமாக தாக்கிய கமல்
- IndiaGlitz, [Sunday,August 27 2017]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களின் ஆதரவை இழந்துவிட்டாலும் சனி, ஞாயிறு மட்டும் கமல்ஹாசன் தனது அனுபவத்தின் மூலம் நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் நீதிமன்றம் அமைக்கப்பட்டு அதில் கமல் நீதிபதியாகவும், பங்கேற்பாளர்கள் குற்றவாளிகளாகவும், வழக்கறிஞராகவும் நடித்தனர். காஜல் – சினேகன், சுஜா – காஜல், கணேஷ் – வையாபுரி, ரைசா – கணேஷ், சினேகன் – ஆரவ், ஹரிஷ்கல்யாண் – ரைசா, ஆரவ் – ஹரிஷ் ஆகியோர் குற்றவாளியாகவும், வழக்கறிஞராகவும் மாறி மாறி நடித்து தங்கள் மீதான குற்றங்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்த நிலையில் ஒரு வழக்கின் இடையில் பேசிய நீதிபதி கமல்ஹாசன், 'முகத்துக்கு நேராக தப்பாக பேசினாலும் கூட, அடுத்து உடனே கை கோர்த்துக்கொள்கிறார்கள் என்று கூறினார். தற்போதைய அரசியலை இந்த கருத்து மறைமுகமாக கூறியதால் பார்வையாளர்கள் புரிந்து கொண்டு கைதட்டினார்கள். ஆனால் வெளியே என்ன நடக்கின்றது என்பது தெரியாததால் பங்கேற்பாளர்களுக்கு இது புரியவில்லை. அரசியல்வாதிகள் மீதான கமலின் இந்த மறைமுக தாக்குதலை பெரும்பாலானோர் ரசித்தனர் என்பது டுவிட்டரில் வெளியாகியுள்ள பதிவுகளில் இருந்து தெரியவருகிறது.