பிக்பாஸ் ஆயிஷாவின் காதலர் இவரா? வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் ஆயிஷா தனது இன்ஸாகிராம் பக்கத்தில் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் ஆயிஷா என்பதும் இவர் 63வது நாளில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா அவ்வப்போது பரபரப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் ’காத்திருங்கள்’ என்றும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்ட நிலையில் அவர் தனது காதலர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவியில் ’பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் நடித்த ஆயிஷா அதன்பின் ஜீ தமிழ் சேனலில் ’’சத்யா’ என்ற தொடரில் தொடரில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் அவர் பிரபலமாகி உள்ள நிலையில் திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments