பிக்பாஸ் நடிகையின் தாய் புற்றுநோயால் மரணம்.. ஆறுதல் கூறும் திரையுலகினர்!

  • IndiaGlitz, [Monday,January 30 2023]

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் மூன்று முறை கலந்து கொண்ட நடிகையின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து நடிகைக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஹிந்தியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று முறை கலந்துகொண்டவரும் அதேபோல் மராத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன இவ்வாறு பல நேரங்களில் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் நடித்த ’கம்பீரம்’ என்ற படத்தில் நடித்த இவர், ஒரு சில தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆட உள்ளார். மைசூரை சேர்ந்த ஆதில் என்பவரை சமீபத்தில் நடிகை ராக்கி சாவந்த் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராக்கி சாவந்த் தாயார் புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுத நிலையில் திரையுலகினர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை ராக்கி சாவந்த் தனது தாயார் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் ரசிகர்களிடம் வேண்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.