close
Choose your channels

அரைகுறை ஆடையுடன் இன்ஸ்டா ரீல் வீடியோ: பிக்பாஸ் நடிகையை கைது செய்த காவல்துறை

Wednesday, December 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் தொலைக்காட்சி நடிகையுமான ஒருவர் அரைகுறை ஆடையில் இன்ஸ்டாகிராமில் ரீலுக்காக போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென காவல்துறை அவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் உர்ஃபி ஜாவித். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும்.

உர்ஃபி ஜாவித் கிட்டத்தட்ட முழு நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணத்துடன் கூடிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்வார். இந்த பதிவுகளுக்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் துபாய் சென்ற உர்ஃபி ஜாவித் அங்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக அரைகுறை ஆடையுடன் வீடியோ போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டு இருந்ததாகவும் அப்போது அங்கு வந்த காவல்துறை அவரைக் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாய் அரசின் கட்டுப்பாட்டை மீறி ஆபாசமாக அவருடைய ஆடை இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகை உர்ஃபி ஜாவித் கைது செய்யும்போது அவர் எந்தவிதமான உடை அணிந்து இருந்தார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நடிகை உர்ஃபி ஜாவித் கைது செய்யப்பட்ட தகவல் பாலிவுட் திரையுலகில் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment