பிக்பாஸ் நடிகருக்கு பெண் குழந்தை

  • IndiaGlitz, [Saturday,June 29 2019]

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கணேஷுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 1நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட இறுதிவரை தாக்குப்பிடித்து இருந்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவருக்கும் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான நிஷாவும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் நிஷா கர்ப்பமானார்.

கடந்த சில மாதங்களில் நிஷாவின் வளைகாப்பு நிகழ்ச்சி உள்பட ஒருசில புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த கணேஷ், இன்று குழந்தை பிறந்த இனிய செய்தியையும் வெளியிட்டுள்ளார், கணேஷ்-நிஷா தம்பதிக்கு கோலிவுட் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.