டாஸ்க்கில் நிக்சன் செய்த பிராடுத்தனம்.. உதவி செய்த விஜய் வர்மா? கமல்ஹாசன் கண்டிப்பாரா?
- IndiaGlitz, [Thursday,December 28 2023]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் நிக்சன் வெற்றி பெற்ற நிலையில் அவர் பிராடுத்தனம் செய்துதான் வெற்றி பெற்றுள்ளதாக பார்வையாளர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதை அடுத்து இந்த வாரம் சனிக்கிழமை கமல்ஹாசன் இதனை கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முயல் டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவருக்கும் வரும் கார்டின் அடிப்படையில் முன்னேற வேண்டும் என்று குறிப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முயல் இருக்கும் எல்லைக் கோட்டுக்கு செல்லும் போட்டியாளர் முயலை எடுத்து விடுவார் என்பதுதான் டாஸ்க்.
இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் முயலை நிக்சன் நெருங்கிவிட்ட நிலையில் அவர் ஒரு கார்டை எடுத்தார். அந்த கார்டில் இரண்டு ஸ்டெப் முன் செல்லலாம் என்று வந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் நிக்சன் ஏற்கனவே சில கார்டுகளில் அடையாளம் வைத்திருந்ததாகவும் அதன் அடிப்படையில் வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி நிக்சன் சிலரை எலிமினேஷன் செய்ததும் அடையாளம் வைத்த கார்டுகளின் அடிப்படையில் தான் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நிக்சன் வெற்றி பெற மறைமுகமாக நடுவராக இருந்த விஜய் வர்மா உதவி செய்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார்டுகளில் அடையாளம் வைக்கப்பட்டதை இன்னொரு நடுவர் அர்ச்சனா கண்டுபிடித்து ரகசியமாக பிக்பாஸுக்கு மைக் மூலம் தகவல் அளித்தார். ஆனால் அதை பிக் பாஸ் கண்டு கொள்ளவில்லை. எனவே வரும் சனிக்கிழமை கமல்ஹாசன் இதை கண்டிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் நேற்றைய டாஸ்க்கில் முதலிடம் நிக்சன், இரண்டாவது இடம் மாயா மற்றும் மூன்றாவது இடம் பூர்ணிமாவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
WTF is this #NakkiNixen clearly scratching tha card ♠️
— Sekar 𝕏 (@itzSekar) December 27, 2023
Ultra HD quality ithuku mela
enna venum @ikamalhaasan #BiggBossTamil7 #BiggBoss7Tamil#BiggBossTamilpic.twitter.com/DrKps6ZLLe
#VijayVarma caught moments
— Sekar 𝕏 (@itzSekar) December 27, 2023
Dei #NakkiNixen unaku game
vilayada teriyatha #BiggBossTamil7 #BiggBoss7Tamil#BiggBossTamilpic.twitter.com/9sxNWJL10j