பிக்பாஸ் 4வது நாள்: ஓவியா-சினேகன் மோதலும் கட்டிப்பிடித்தலும்
- IndiaGlitz, [Friday,June 30 2017]
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசிலரின் வரவேற்பையும் பலரின் கேலி, கிண்டல்களையும் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் விதிகள் தன்னை எரிச்சல் அடைய செய்வதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு தான் விளையாட மட்டுமே வந்துள்ளதாகவும் விதிகளை பின்பற்றி ஒழுக்கமாக இருக்க இது ஒன்றும் ஸ்கூல் இல்லை என்றும் நடிகை ஓவியா ஆவேசமாக கூறினார்.
ஓவியாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த கேப்டன் சினேகன், பிக்பாஸ் விதிகளுக்கு கட்டுப்படுவேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுதான் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டிருப்பதாகவும், எனவே நிகழ்ச்சி முடியும் வரை அனைவரும் கண்டிப்பாக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஓவியா, நடுவில் எழுந்து வெளியே செல்ல, இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் கஞ்சா கருப்பு, ஆரா ஆகியோர் ஓவியாவையும், கணேஷ் வெங்கட்ராமன், காயத்ரி ஆகியோர் சினேகனையும் சமாதானப்படுத்தினர். பின்னர் ஓவியா, சினேகனிடம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு அவரை கட்டிப்பிடித்து சினேகமானார்.