கொரோனா பரபரப்பில் எளிமையாக நடந்த பிக்பாஸ் வின்னரின் திருமணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிக்பாஸ் வின்னரின் திருமணம் ஒன்று மிக எளிமையாக நடந்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
இந்தி 'பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியின் வின்னரான அஷுடோஸ் கவுசிக் என்பவர் தனது நீண்ட நாள் காதலியான அர்பிதா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த இந்த திருமணம், மணமகன் வீட்டின் மொட்டை மாடியில் மிக எளிமையாக நடந்தது.
இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் இருப்பினும் ஏராளமானோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த திருமணத்தை பார்த்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணமகன், மணமகள் ஆகிய இருவரும் கையில் கிளவுஸ் அணிந்திருந்தனர் என்பதும் அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்தவரும் மாஸ்க் அணிந்து மிகவும் பாதுகாப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணம் மிக எளிதாக முடித்து விட்டதால் இந்த திருமணத்திற்காக செலவிட திட்டமிட்டிருந்த தொகையை நன்கொடையாக அளிக்கப்பட்டதாகவும் மணமகன் அஷுடோஸ் கவுசிக் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com