சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் கொரோனாவால் மரணம்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவர் வினோத் ஆனந்த் ஜா. இவர் பொதுமக்களால் ஓம் சுவாமி என்று அழைக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10வது சீசனில் ஓம் சுவாமி போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது செய்த ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி காரணமாக போட்டியிலிருந்து கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஓம் சுவாமி. அவர் கொரோனா வைரஸிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது என்றும் இன்று மதியம் அவரது உயிர் பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'அருண் விஜய் 33' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்!

நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கும் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

அய்யா, அண்ணன், மாமா: இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் குறித்து சூரியின் டுவீட்!

இசைஞானி இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் இன்று முதல் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

'மாஸ்டர்' படம் பார்க்க விஜய்யின் வெறித்தனமான ரசிகை செய்த வேலையை பாருங்க!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியானது என்றும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும்

3500 கிமீ பயணம்: சரத்குமார்-ராதிகாவின் வீடியோ வைரல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன 

பெண்கள் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தமிழக முதல்வர் செயல்படுத்திய பல அதிரடி திட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.