பிக்பாஸின் மாஸ் வெற்றியாளர் ஆரியின் மனம் திறந்த பேட்டி! ரசிகர்களுடன் உரையாடிய வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,January 30 2021]

பிக்பாஸ் 4 ஆவது சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களின் அதிக வாக்குகளையும் ஆதரவையும் பெற்று வெற்றிப் பெற்றார் ஆரி அர்ஜுனன். மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒரு முதிர்ந்த மனிதராகவும் நேர்மைக்கு அடையாளமாகவும் நடந்து கொண்டார். இந்த நடத்தை ரசிகர்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது. இதனால் ஆரியிடம் எப்படி உங்களால் இதை செய்ய முடிந்தது எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். இப்படி ரசிகர்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனன் முதல் முறையாக மனம் திறந்து பதில் அளித்து இருக்கிறார்.

அதில் முதற்கட்டமாக, எனக்கு வாக்களித்து, ஆதரவு தந்த ரசிர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வாழ்க்கையில் உழைக்கிற எல்லா நபர்களின் வெற்றியாகவே பார்க்கிறேன், அவர்களாலும் வெற்றிப்பெற முடியும் என்பதற்கு அடையாளமாகவே இந்த வெற்றி இருக்கிறது என்று பிக்பாஸ் ஆரி சொல்லி இருந்தார். மேலும் அந்தப் போட்டியில் பாலாஜியுடனான கடுமையான போட்டி, கோபம், உணர்ச்சி வசப்படுதல் போன்ற பல நடத்தைகளுக்கு ஆரி தன்னுடைய விளக்கத்தை இந்தப் பேட்டியில் அளித்து இருக்கிறார்.

அதில், பாலாஜியை என்னோட பிரதிபலிப்பாக பார்த்தேன். என்னுடைய சிறிய வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன். அதனால்தான் பாலாஜி என்னிடம் மன்னிப்புக் கேளுங்கள் என கூறியபோது உடனடியாக நான் மன்னிப்புக் கேட்டேன். காரணம் மேலும் உச்சக்கட்ட கோபத்திற்கு அவர் சென்றுவிடக் கூடாது என நினைத்தேன். பாலாஜியை என்ற கேரக்டர் மூலம் என்னை நானே திரும்பி பார்க்க முடிந்தது. அதனால்தான் பல நேரங்களில் அவருக்கு ஏற்றாற்போல இருந்ததையும் பார்த்து இருக்க முடியும் என்றார்.

உங்களால் எப்படி கோபப்படாமல் இருக்க முடிந்தது எனக் கேட்ட கேள்விக்கு, கோபம் எனக்கும் இருந்து இருக்கிறது. நானும் உணர்ச்சி வசப்பட்டேன். பாலாவிடம் இருந்து கற்றுக்கொண்ட ஒன்று மரியாதையை யாரிடமும் இருந்து தானாகவே பெறமுடியாது. நடந்து கொள்ளும் முறையில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இந்த இடத்தில் என்னை நான் வளர்த்துக் கொண்டேன். தனிமையாக இருக்கிறீர்கள் என மற்ற போட்டியாளர்கள் கூறியபோது என்ன உணர்ந்தீர்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு பிக்பாஸ் என்பது தனி ஆளாக விளையாடும் விளையாட்டு. இங்கு கூட்டணிக்கு இடம் இல்லை என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன். அதேநே ரத்தில் நான் மற்ற போட்டியாளர்களோடு நட்பும் பாராட்டி இருக்கிறேன். அவர்களோடு சேர்ந்து இருந்தபோது ஆதரவுக் காட்டி இருக்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.

பிக்பாஸில் இருந்து திரும்பி வந்தபோது மற்றப் போட்டியாளர்களைப் போல நீங்கள் ஏன் ஆரவாரம் காட்டவில்லை? எனக் கேட்ட கேள்விக்கு, இந்த வெற்றியை நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். அதனால் இது தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன் என்றார். மேலும் இந்த அளவிற்கு மனஉறுதிப் படைத்தவராக இருப்பதற்கு யார் காரணம்? எந்த இடத்தில் உங்களை மாற்றிக் கொண்டீர்கள்? எனக் கேட்ட கேள்விக்கு என்னுடைய அப்பாதான் இந்த மாற்றத்திற்கு காரணம். நிதானம். அந்த நிதானம்தான் எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு.

இதைத்தான் பிப்பாஸிலும் நான் கடைப்பிடித்தேன். தோல்வியை சந்தித்தவர்களுக்கு இந்த நிதானமும் தேர்ந்த நடத்தையும் இயல்பாகவே வந்துவிடும். இதுதான் என்னுடைய பிளஸ் என்றும் ஆரி கூறி இருக்கிறார். மற்றப் போட்டியாளர்கள் உங்களை ஒதுக்குகிறார்களோ? என பிக்பாஸ் வீட்டில் உணர்ந்தீர்களா எனக் கேட்ட கேள்விக்கு ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் கூறிய வார்த்தைகளே என்னுடைய பெரிய நிம்மதியாக இருந்தது. நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்பதை அவருடைய வார்த்தையில் இருந்து உணர்ந்து கொண்டேன் என்றும் ஆரி கூறினார்.

மேலும் எதிர்மறையான கருத்துகளை கூறும்போது அல்லது விமர்சிக்கும்போது தரமுள்ளவையாக இருக்க வேண்டும். தரமற்ற வார்த்தைகளை யாரும் பேசக்கூடாது. இது சமூக வெளியில் கலாச்சாரத்தை சீர்குலைத்து விடும். இது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். இதை ஒவ்வொரு மனிதனரும் கடைப்பிடிக்க வேண்டும். நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தபின்பு நான் பிக்பாஸ் போட்டியை பார்க்க விரும்பவில்லை. காரணம் ஒவ்வொரு போட்டியாளர்கள் மீதும் நான் மதிப்பு வைத்திருக்கிறேன். அந்த மதிப்பு எந்த காரணத்தினாலும் மாறிவிடக் கூடாது. அதற்காகத்தான் நான் போட்டியை பார்க்க வில்லை என்றார்.

மேலும் இந்தப் போட்டியில் இவ்வளவு நாள் நீடிப்பதற்கு, மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய உற்சாகம். நான் போட்டியை சரியாக விளையாடுகிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். என் வெற்றியை பார்க்க பெற்றோர்கள் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் தோன்றும். ஆனால் இன்றைக்கு அன்புக்காட்ட தமிழகத்தில் இவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை நினைக்கும்போது இதைவிட பெரிய வெற்றி எதுவும் இல்லை என்றே உணருகிறேன். இந்த விளையாட்டில் ஒட்டுமொத்த மக்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறேன் இதுவே எனக்குப்போதும் என ஆரி அர்ஜுனன் கூறியது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

இவரது இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது… பெருமிதம் கொள்ளும் மும்பை கேப்டன்!

இந்திய ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளி வீரர்? அதுவும் 19 வயதில்?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 19 வயது இளைஞர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகி உள்ளார்.

கடன் தொல்லையால் ஒரு குடும்பமே ரயில் முன்பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா நேரத்தில் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

சென்னையில் அடுத்த தலைமுறை இ-பைக்குகள்… துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் புதிய இ-பைக்குகள், அதை சார்ஜ் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான செல்பி பாயிண்ட் மற்றும் அடுத்த தலைமுறை ஜென் சைக்கிள்கள் போன்றவை இயக்கப்பட உள்ளன.

5 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம்… வைரல் வீடியோ!

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் க்ரூசர் காரை அசால்ட்டாக ஓட்டுகிறான்