ஜூலிக்கு ஆர்த்தியின் அதிரடி பதில்
- IndiaGlitz, [Saturday,August 05 2017]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'உண்மை, உண்மையை தவிர வேறு இல்லை' என்ற கேரக்டரில் ஓவியாவும், 'பொய், பொய்யை தவிர வேறு வார்த்தை எனது வாயில் வராது' என்ற கேரக்டரில் ஜூலியும் கலந்து கொண்டிருப்பது முரண்பாடுகளில் வடிவம் என்றே கூறலாம்.
இந்த நிலையில் ஓவியா திடீரென மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் ஜூலி, 'ஒரு நர்ஸா இருந்தும் என்னால் ஓவியாக்கு ஹெல்ப் பண்ண முடியலையேன்னு வருத்தமா இருக்கு' என்ற மீம்ஸ் ஒன்று வெளிவந்துள்ளது
இந்த மீம்ஸ்க்கு டுவிட்டரில் பலர் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலியை ஆரம்பத்தில் இருந்தே 'போலி' என்று சரியாக கணித்த ஆர்த்தி பதிவு செய்த கமெண்டில் கூறியதாவது: 'ஓவியாவுக்கு ஹெல்ப் பண்ண நர்ஸா இருக்க தேவை இல்லை, மனிதத்தன்மை இருந்தால் போதும்' என்று அதிரடியாக பதில் கூறியுள்ளார்.