நடிகை நமீதா திருமணம்: உறுதி செய்த பிக்பாஸ் ரைசா

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

பிரபல நடிகையும், பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான நமீதா, அவருடைய காதலரை திருமணம் செய்யவுள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு பங்கேற்பாளர்களான ரைசா தெரிவித்துள்ளார்.

நமீதா, ரைசா இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நெருக்கமாகியிருந்த நிலையில் தற்போது ரைசா நமீதாவின் திருமணம் குறித்த தகவலை வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

நடிகை நமீதா தனது நீண்டநாள் காதலரான வீரா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக ரைசா அறிவித்துள்ளார். இந்த தகவலை அதே வீடியோவில் நமிதாவும், வீராவும் உறுதி செய்துள்ளனர். திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உணவு சரியில்லை என்று கூறிய வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கடைக்காரர்

தெருவோரத்தில் தள்ளுவண்டியில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவர் உணவு சரியில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து கொதிக்கும் எண்ணெயை துரத்தி துரத்தி ஊற்றியுள்ள சம்பவம்

இயக்குனர் ஹரி படங்களின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் திடீர் மரணம்

கோலிவுட் திரையுலகின் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் இன்று மதியம் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

கேரளாவுக்கு வந்த 750 டன் செல்லாத ரூபாய் நோட்டுக்கள்! ஏன் தெரியுமா?

பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெற்ற இந்த செல்லாத நோட்டுக்கள் என்ன ஆகின என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயா டிவி ரெய்டு நடக்கும்ன்னு நினைச்சேன்: நடிகை கஸ்தூரி

கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து தனது பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகை கஸ்தூரி.

ஜெயலலிதா இருந்திருந்தால் ரெய்டுக்கு வந்திருப்பார்களா? சி.ஆர்.சரஸ்வதி

நாடு முழுவதிலும் உள்ள சசிகலா குடும்பத்தினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இன்று காலை முதல் வருமான வரித்துறை அலுவலகர்களால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.