நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணனும்? ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றி நாயகி என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஓவியா ஒருவரே. இவரால் தான் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது என்று கூறினால், அதில் எள்ளளவும் பொய் இல்லை.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாக வெளியேறிய ஓவியா இன்று தனியார் கடைத்திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் கலாச்சாரத்தின்படி சேலை காஸ்ட்யூமில் வந்திருந்த ஓவியாவிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா, ஆரவ்வை நீங்கள் இன்னும் லவ் பண்றிங்களா? என்று கேட்டார். அதற்கு ஓவியா தனது டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து, பின்னர் கூட்டத்தினர்களை பார்த்து, 'எனக்கு இவ்வளவு லவ் இருக்கும்போது நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணனும்' என்று பதிலளித்தார். இந்த பதிலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கரகோஷம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments