close
Choose your channels

ஜல்லிக்கட்டு ஜூலியின் முதல் காதல் ஆல்பம்

Monday, July 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஊடகங்களின் பார்வையால் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜூலி. தற்போது அந்த புகழால் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 பேர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சினிமாத்துறையை சேராத ஒரே ஒருவர் ஜூலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே காதல் ஆல்பம் ஒன்றில் ஜூலி நடித்த பாடல் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. மிக இயல்பாக காதலை வெளிப்படுத்தும் விதத்தில் நடித்துள்ள ஜூலி ஒரு தேர்ந்த நடிகைக்கு இணையாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டே முதல் நாள் ஜூலி கூறியபோது 'எனக்கு தொலைக்காட்சியில் ஆர்ஜே ஆகவேண்டும் என்று விருப்பம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பிரபலமானால் எனது விருப்பம் நிறைவேறும் என்று நம்புகிறேன்' என்று கூறினார். ஏற்கனவே ஆல்பத்தில் அருமையாக நடித்துள்ள ஜூலி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நன்றாக நடித்து(!) வருகிறார். எனவே அவரது ஆசை விரைவில் நிறைவேறிவிடும் என்றே கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment