close
Choose your channels

எம்ஜிஆர், சிவாஜி, கமல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டா ஜூலி! கஞ்சா கருப்பு

Tuesday, July 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றபட்ட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தனது அனுபவங்களை பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடிந்தவுடன் அனைவரையும் தன்னுடைய கிராமத்துக்கு வரவழைத்து கிடா வெட்டி விருந்தளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 11 ஆடுகளை பிக்பாஸ் குடும்பத்தினரே சமைக்க, அந்த சாப்பாட்டை ஏழை மக்களுக்கு போட்டு பசியாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிதான் வெற்றி பெறுவார் என்றும் அவர் பெரிய நடிகை என்றும், சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் நடிப்பு அவரிடம் இருப்பதாகவும் கூறிய கஞ்சாகருப்பு, அங்கு இருக்கிறவங்களை எல்லோரையும் முட்டாளாக்கி, வெளியே அனுப்பிவிட்டு, மொத்தப் பரிசையும் ஜூலி தட்டிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கெட்டதையே ஒளிபரப்பி வருகின்றார்கள் என்றும் வீட்டினுள் நடக்கும் நல்ல விஷயங்களையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment