எம்ஜிஆர், சிவாஜி, கமல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டா ஜூலி! கஞ்சா கருப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றபட்ட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தனது அனுபவங்களை பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடிந்தவுடன் அனைவரையும் தன்னுடைய கிராமத்துக்கு வரவழைத்து கிடா வெட்டி விருந்தளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 11 ஆடுகளை பிக்பாஸ் குடும்பத்தினரே சமைக்க, அந்த சாப்பாட்டை ஏழை மக்களுக்கு போட்டு பசியாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிதான் வெற்றி பெறுவார் என்றும் அவர் பெரிய நடிகை என்றும், சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் நடிப்பு அவரிடம் இருப்பதாகவும் கூறிய கஞ்சாகருப்பு, அங்கு இருக்கிறவங்களை எல்லோரையும் முட்டாளாக்கி, வெளியே அனுப்பிவிட்டு, மொத்தப் பரிசையும் ஜூலி தட்டிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கெட்டதையே ஒளிபரப்பி வருகின்றார்கள் என்றும் வீட்டினுள் நடக்கும் நல்ல விஷயங்களையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

More News

போதை மருந்து விவகாரம்: பிரபல நட்சத்திரங்களுக்கு குறிக்கப்பட்ட தேதிகள்

ஐதராபாத்தில் சமீபத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் குறித்து தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் 11 பேருக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்து வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

அரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்: குவியும் பாராட்டுக்கள்

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றி வருவது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்...

தேவைதகளுடன் வாழ்ந்த சினேகனுக்கு தேவையா இது?

தனியார் தொலைகாட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எந்த அளவுக்கு நேயர்களின் சப்போர்ட் இருக்கின்றதோ, அதே அளவுக்கு ஒருசிலரை நேயர்கள் அதிகளவில் வெறுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக சினேகன் உள்ளார் என்பது சமூகவலைத்தள பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது....

பல்சர் சுனில் ஏற்கனவே இன்னொரு நடிகையை கடத்தியவரா? அதிர்ச்சி தகவல்

பிரபல மலையாள நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாக பல்சர் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார்

ஓவியா, ஜூலி வேலைக்காரர்களா? பிக்பாஸ் குடும்பத்தில் திடீர் பரபரப்பு

கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது காமெடி காட்சிகளும், போலியான காட்சிகளும் நடந்து வருவதாக கூறப்பட்டாலும், சில சமயம் சீரியஸ் காட்சிகளும் நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் சற்று முன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் ஜூலியும் ஓவியாவும் ஓரம்கட்டப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது...