பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு பெருமை சேர்க்கும் சென்னை புத்தக கண்காட்சி!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த கண்காட்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்தது

அந்த வகையில் இந்த ஆண்டு 44-வது புத்தக கண்காட்சி சென்னையில் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் சென்னையை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒவ்வொரு வாரமும் ஒரு சில புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பார் என்பதும், அந்தப் புத்தகங்கள் தனக்கு ஏன் பிடித்தது என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் என்று பபாசி நிர்வாகம் அறிவித்துள்ளது. பபாசியின் இந்த அறிவிப்பு கமல்ஹாசனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி ஆகியவையும் புத்தக கண்காட்சியில் புதிதாக அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.