2015-ல் தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்கள்
கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் 'பசங்க 2' மற்றும் ஜெயம் ரவியின் 'பூலோகம்' ஆகிய படங்களோடு சேர்த்து இந்த 2015ஆம் ஆண்டில் மொத்தம் 204 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்திய அளவில் அதிக படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் சினிமா, அதிக வெற்றி படங்களை கொடுத்ததா? என்று பார்த்தால் 'இல்லை' என்றுதான் சொல்ல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள், ப்ளாப் ஆன படங்கள், எதிர்பாராமல் சூப்பர் ஹிட் ஆகிய படங்கள், தயாரிப்பாளரின் கையை கடிக்காத படங்கள், ரிலீஸுக்கு தயாராக இருந்தும் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக வெளிவர முடியாத படங்கள், சர்ச்சைக்குள்ளான படங்கள் என தமிழ் சினிமா இந்த ஆண்டில் அனைத்து வகை படங்களையும் தந்துள்ளது. இந்த கட்டுரையில் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
'டார்லிங்': இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்றால் அது ஜி.வி.பிரகாஷின் 'டார்லிங்' படம்தான். ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.32 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. பேய்ப்பட சீசனில் வெளிவந்த இந்த படம் திகில், காமெடி மற்றும் ரொமான்ஸ் ஆகியவை சரியான அளவில் கலந்து உருவானதால் வெற்றி பெற்றது.
'காஞ்சனா 2': ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 2' படம்தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படம். இந்த படத்தின் இரண்டாம் பாதி கலவையாக விமர்சிக்கப்பட்டாலும் இந்த ஆண்டில் அதிகம் பேர் பார்த்த படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.17 கோடிதான். ஆனால் படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கும் மேல். இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை சமீபத்தில் எந்த படமும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'ஓ காதல் கண்மணி': மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படமும் இந்த ஆண்டின் வெற்றி படங்களில் ஒன்று. ரூ.6 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தின் முதல் நான்கு நாட்கள் வசூல் மட்டுமே ரூ.14 கோடி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இந்த படம் அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களுக்கு பின்னர் மணிரத்னம் பெற்ற மிகப்பெரிய வெற்றிதான் இந்த படம்.
'காக்கா முட்டை': அடுத்ததாக தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' திரைப்படம். பொதுவாக விருது வாங்கிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகாது என்ற செண்டிமெண்டை உடைத்த படம் இது. உலக திரைப்பட விழாக்களில் பல வெற்றிகளை குவித்த இந்த படம் வசூலிலும் பெரும் சாதனை புரிந்தது. ரூ.70 லட்சத்தில் தயாரான இந்த படத்தின் வசூல் ரூ.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
'பாபநாசம்': கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'பாபநாசம்' திரைப்படம் இந்த ஆண்டின் வெற்றி படங்களில் ஒன்று. ரீமேக் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டுமின்றி ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணம், கமல்ஹாசனின் அருமையான நடிப்பு மற்றும் மிகச்சிறந்த திரைக்கதை.
'பாகுபலி': ரிலீஸுக்கு முன்பே இந்த படம் கண்டிப்பாக வசூலில் பெரிய சாதனை படைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த படம்தான் 'பாகுபலி' ஆனால் எதிர்பார்ப்பையும் மீறி இந்திய அளவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கும் வசூல் செய்து திரையுலகையே அதிசயிக்க வைத்தது. 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்' படத்திற்கு இணையான போர்க்காட்சிகள், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னாவின் ஒப்பிடமுடியாத நடிப்பு, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஈடு இணையில்லாத இயக்கம் ஆகியவை பெரிய அளவில் பேசப்பட்ட படம். குறிப்பாக கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்? என்ற சஸ்பென்ஸ் உடன் இந்த படத்தை முடித்து அடுத்த பாகத்தை எல்லோரும் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்தான் 'பாகுபலி.
'தனி ஒருவன்': இந்த ஆண்டில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களும் உண்டு. அதில் ஒன்றுதான் ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்'. முதல் காட்சியில் சுமாரான வசூலையே கொடுத்த இந்த படம் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட இலவச புரமோஷனால் அடுத்த காட்சியே திரையரங்குகளை ஹவுஸ்புல் ஆக்கிய படம். ரூ.20 கோடியில் தயாரான இந்த படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படம் விரைவில் ரீமேக் ஆகவுள்ளது.
'மாயா': இந்த வருடத்தில் வெளியான வெற்றி படங்களில் நாயகிக்காகவே ஓடிய முதல் வெற்றிப்படம் நயன்தாராவின் 'மாயா'. கதை சொல்லும் பாணி, திரைக்கதை, அபாரமான பின்னணி இசை ஆகியவை இந்த படத்தின் பலமாக இருந்தாலும் நயன்தாராவுக்காகவே ஓடிய படம் என்றுதான் சொல்ல வேண்டும். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.50 கோடி வசூல் செய்தது.
'நானும் ரவுடிதான்': நயன்தாராவுக்காக ஓடிய மற்றொரு படம் 'நானும் ரவுடிதான்'. விஜய்சேதுபதி ஹீரோ என்றாலும் நயன்தாராவின் செல்வாக்கு இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. காக்கா முட்டை' படத்திற்கு பின்னர் தயாரிப்பாளர் தனுஷ் அதிக லாபம் சம்பாதித்த படம்.
'வேதாளம்': இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான அஜீத்தின் 'என்னை அறிந்தால்' நல்ல முறையில் விமர்சிக்கப்பட்டாலும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை தரவில்லை. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் வெளியான வெற்றிப்படம்தான் 'வேதாளம்'. முழுக்க முழுக்க அஜீத்தை நம்பியே எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்ப்பையும் மீறி மிகப்பெரிய வசூலை பெற்றது.
மேற்கண்ட பத்து படங்களை தவிர இசை, அனேகன், கொம்பன், வை ராஜா வை, 36 வயதினிலே, டிமாண்டி காலனி, 49 ஓ, த்ரிஷா இல்லைனா நயன்தாரா, தூங்காவனம், ஆகிய படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த பட்டியலில் உள்ளன.

கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் 'பசங்க 2' மற்றும் ஜெயம் ரவியின் 'பூலோகம்' ஆகிய படங்களோடு சேர்த்து இந்த 2015ஆம் ஆண்டில் மொத்தம் 204 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்திய அளவில் அதிக படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் சினிமா...