கமலின் எண்ணூர் விசிட் ஏற்படுத்திய திடீர் மாற்றம்
- IndiaGlitz, [Sunday,October 29 2017]
கடந்த சில வருடங்களாக எண்ணூர் வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடியும் கிடைக்காத நடவடிக்கை, ஒரே ஒரு நாள் கமல் விசிட் செய்ததால் அப்பகுதிக்கு விமோச்சனம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன் எண்ணூர் விசிட் குறித்த செய்தி கிடைத்த சில நிமிடங்களில் திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி அவர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது கமலுக்கும் அந்த பகுதி மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
மேலும் கமல் விசிட் அடித்த மறுநாளே அதாவது இன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகங்களை கையில் ஏந்தி பேரணி நடத்தி வருகின்றனர். மேலும் டுவிட்டரில் #SaveEnnoreCreek என்னும் ஹேஷ்டேக் டிரெண்டுக்கு வந்துள்ளது. கமல்ஹாசனின் ஒரே ஒரு விசிட் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால் மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.