ஓவியா வெளியேற்றம்: திரையுலக பிரபலங்களின் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவருக்கு திடீரென அதீத புகழ் கிடைத்தால் பொறாமைப்படும் குணம் இருக்கும். அதற்கு திரையுலகமும் விதிவிலக்கல்ல. ஆனால் ஓவியா விஷயத்தில் அவருக்கு கிடைத்த திடீர் புகழால் யாருக்கும் பொறாமை ஏற்படவில்லை. தங்கள் துறையை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்த புகழை தங்களுக்கு கிடைத்ததாகவே எண்ணி அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர். ஓவியா குறித்து ஒருசில பிரபலங்கள் தினமும் டுவீட்டை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஓவியா நேற்று வெளியேறியதாக கூறப்படும் நிலையில் திரையுலகினர்களின் ரியாக்சன் என்ன என்பதை பார்ப்போம்.
ஸ்ரீப்ரியா: ஓவியாவின் வெளியேற்றம் பெரும் மன வருத்தத்தை தருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிலைமையில் ஓவியா வெளியேறுவது அவருக்கு ஒருவிதத்தில் நல்லதுதான். வெளியே அவருக்கு இருக்கும் ஆதரவை அவர் தெரிந்து கொண்டால் அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு பெருமைப்படுவார்.
ஸ்ரீதிவ்யா: ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மன வலிமையுடன் இருங்கள் ஓவியா. நீங்கள் ஏற்கனவே அனைவரின் இதயத்தை வென்றுவிட்டீர்கள்.
சதீஷ் (நடிகர், நடன இயக்குனர்): ஓவியா அனைவரிடமும் பேசி கொண்டிருந்தாலும் தனிமையில் இருப்பதை போல் உணர்ந்தார். எனவே அவர் வெளியேறியது அவரை பொருத்தவரையில் நல்ல முடிவுதான்.
ரோபோ சங்கர்: பை பை ஓவியா, குட்பை பிக்பாஸ் தமிழ்
ஆர்த்தி: கோடிக்கணக்கான மக்கள் வைத்த அன்பு வீணாகாது. ஓவியா டார்லிங் நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். நல்ல உடல்நிலை, அமைதியான நிலையை அடைய வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com