கற்பழித்தார், என் அப்பாவை கொலை செய்தார்: சல்மான்கான் மீது பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

கடந்த சில மாதங்களாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். தனுஸ்ரீதத்தா, ஸ்ரீரெட்டி, சின்மயி உள்பட பலர், பிரபலங்கள் மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது பாலிவுட் நடிகையும், இந்தி பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பூஜா மிஸ்ரா, பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், சத்ருஹன்சின்ஹா மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

'சுல்தான்' படப்பிடிப்பின்போது சல்மான்கான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாவும், அதேபோல் சத்ருஹன்சிங் உள்பட இன்னும் ஒருசிலர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடைய தந்தையை சல்மான்கான் குடும்பத்தினர்களும், சத்ருஹன்சின்ஹா குடும்பத்தினர்களும் கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய குற்றங்கள் நடந்துள்ளதாக கூறும் நடிகை பூஜா மிஸ்ரா, இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தாரா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.