ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்தரராஜன் இயக்கி வரும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படம் என்று கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது,.

இந்த நிலையில் இந்த படம் குறித்த ஒருசில முக்கிய அறிவிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே மாலை 6 மணியை எதிர்பார்த்து ஜெயம் ரவி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை ஹித்தீஷ் ஜெபக் தயாரித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.