அமெரிக்காவையே கட்டி ஆளப்போகும் ஜோ பிடன்… ஒரு சிறுமியிடம் முழங்காழிட்டு கேட்ட மன்னிப்பு!!!

 

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாநயகக் கட்சி பெரும்பான்மை வெற்றிப் பெற்று இருக்கிறது. இதனால் அக்கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அடுத்த அதிபர் பதவியில் பொறுப்பு வகிக்கப் போகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோ பிடன் ஒரு கறுப்பின சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த நிகழ்வை அமெரிக்க ஊடகங்கள் கடும் பரபரப்பாக ஒளிப்பரப்பி வருகின்றன.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் (46) எனும் இளைஞர் இனைவெறித் தாக்குதல் காரணமாக போலீஸ் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இந்த உயிரிழப்பு உலகம் முழுவதும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராக கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் தற்போதைய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஜோ பிடன் சாலையில் நடந்து சென்ற ஒரு கறுப்பின சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜார்ஜ் பிளாய்ட் கொலை சம்பவம் நடைபெற்றபோதே ஜோ பிடன் என்னுடைய ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமே இல்லை எனத் தெரிவித்து இருந்தார். அதையொட்டி ஒரு கறுப்பினச் சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்டதோடு “மனிதநேயத்திற்கு திரும்ப வேண்டும்” என ஒரு அறிக்கையையும் வெளியிட்டு உள்ளார். இதனால் ஜோ பிடனுக்கு ஆதரவுகள் மேலும் கூடிக்கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

More News

ஜோ பிடன் நியமித்த ஆலோசனைக் குழுவில் ஈரோட்டு பெண்!!! மகிழ்ச்சியில் தத்தளிக்கும் கிராமம்!!!

ஜனாநயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்காவின் அடுத்த அதிபர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

பாலாவுக்காக பொங்கி அசிங்கப்பட்ட ஷ்வானி! வெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுவரை அமைதிப்புறாவாக இருந்த ஷிவானி, முதல்முறையாக பொங்கி அதுவும் பாலாஜிக்காக பொங்கி, கேப்ரில்லாவிடம் அசிங்கப்பட்ட காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது

நிதி அகர்வாலின் ஃபர்ஸ்ட்லுக்: வைரலாகும் 'ஈஸ்வரன்' போஸ்டர்கள்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

20 லட்சம் ஆண்டுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் விஞ்ஞானிகள்!!!

மனித இனம் போல வாழ்ந்த ஒரு இனத்தின் எலும்புக்கூடு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாகுமா மாஸ்டர் டீஸர்?

கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களாக திரையுலகமே முடங்கியிருந்த நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக