தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.7,000 ஊக்கத்தொகை? செம ஆஃபரை அறிவித்த நாடு!
- IndiaGlitz, [Friday,July 30 2021]
கொரோனா நோய்த்தொற்று அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி அமெரிக்காவில் மக்கள் கடந்த சில மாதங்களாக முகக்கவசம் இல்லாமல் சாலையில் நடமாடும் காட்சியை பார்க்க முடிந்தது. இதற்குக் காரணம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டிவந்தது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகமும் அங்கு அதிகரித்து காணப்பட்டது.
இதனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்பது போன்ற தளர்வுகளும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டன. ஆனால் தற்போது டெல்டா வேரியண்ட் வகை கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாகாண அரசுகளும் மக்களுக்கு 100 டாலர்கள் நன்கொடைகளை வழங்குமாறு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார். இந்த 100 டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்தை தாண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைத்தூக்கத் துவங்கி இருப்பதால் புதிய விதிமுறைகள் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.