தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த இளம் மாடல்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தயாரிப்பாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக மாடல் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தி திரையுலகில், டி-சீரிஸ் என்ற நிறுவனம் மூலமாக பல ஹிட் படங்களை சினிமாவிற்கு கொடுத்து வருபவர் தான் பிரபல தயாரிப்பாளர் பூஷன் குமார். பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்களையும், தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் ’அட்ரங்கி ரே’ என்ற திரைப்படத்தையும் இந்நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது.
இந்தநிலையில் புஷன்குமார் மீது, 30 வயதுடைய மாடல் ஒருவர் மும்பை அந்தேரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் "சென்ற 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை தயாரிப்பாளர் பூஷன் என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறார்கள்.
இச்சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பூஷனின் டி சீரிஸ் நிறுவனம் இந்த புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது. அந்தப்பெண் கடந்த மார்ச்சில் பூஷனை சந்தித்து பண உதவி கேட்டுள்ளார், அவர் தர மறுத்ததால், இந்த வகையில் மிரட்டி அவர் பணம் பறிக்க முயல்கிறார் என்றும், இதுகுறித்து ஏற்கனவே டிசீரிஸ் நிறுவனம் புகாரளித்ததாகவும் கூறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments