கொரோனா நேரத்தில் தலைத்தூக்கும் போபால் அணுவுலை வெடிப்பு விவகாரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
போபால் தலைநகரில் கடந்த 1984 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட அணுவுலை வெடிப்பினால் அந்நகரம் முழுவதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அணுவுலை வெடிப்பு ஏற்பட்ட ஒரே நாள் இரவில் சுமார் 3,500 மக்கள் உயிரிழந்தனர். அடுத்த இரண்டு வருடங்களில் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு கிட்டத்தட்ட 25 ஆயிரமாக இருந்தது எனவும் மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது. மேலும் அணுவுலை வெடிப்பினால் வரும் பக்கவிளைவுகள் 2 தலைமுறை மக்களையும் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போபால் அணுவுலை சம்பவத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்றே ஒரு தனி மருத்துவமனை போபால் நகரில் அமைக்கப் பட்டு இருக்கிறது. இந்த மருத்துவமனை தற்போது கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டு விட்டதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டத் தொடங்கி இருக்கின்றனர்.
ஏற்கனவே போபால் அணுவுலை வெடிப்பினால் பாதிக்கப் பட்ட மக்களை அரசாங்கம் கைவிட்டு விட்டது எனத் தொடர்ந்து மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது மருத்துவமனை விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. நோய்வாய்ப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு விஷவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நபர்களை சீர்ப்படுத்துவதற்கு போதுமான கருவிகள் எங்களிடம் இல்லை என்று கைவிட்டு விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போபால் தாக்கத்தில் சம்பந்த பட்ட மக்கள் தற்போது கொரோனா பாதிப்புகளில் அதிகம் உயிரிழந்து வருவதாகவும் அதிர்ச்சியை வெளியிட்டு இருக்கின்றனர். போபால் அணுவுலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிக்கும் போது அவர்களில் 45 பேரில் குறைந்தது 20 பேர் இறந்து விடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், போபால் விவகாரத்தில் தொடர்புடைய 37 விழுக்காட்டு மக்களுக்குத் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற நோயால் பாதிக்கப்படும் மக்களை குணப்படுத்துவதற்கு எந்த மருத்துவமனைகளும் முன்வராதக் காரணத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். போபால் அணுவுலை தொழிற்சாலை அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நிறுவனம் அணுவுலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கியதோடு அதிநவீன மருத்துவமனை ஒன்றையும் உருவாக்குவதாக வாக்கு அளித்து இருந்தது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் இந்த அதிநவீன போபால் மெமோரியல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு. அது கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவிற்கு ஆட்படும்போது நிலைமை மேலும் தீவிரமாகிறது. பேருந்து போன்ற வசதிகள் எதுவும் இல்லாததால் நோய்வாய்ப் பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதிலும் கடும் சிரமம் ஏற்படுகிறது என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டத் தொடங்கியிருக்கின்றனர். அணுவுலை வெடிப்பினால போபால் நகரத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாசக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் போன்ற தீவிர நோய் பாதிப்புகளை கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு வேறுபட்ட சிகிச்சையும் தேவைப்படுகிறது என தனியார் மருத்துவமனைகள் அலைக் கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments