கொரோனா நேரத்தில் தலைத்தூக்கும் போபால் அணுவுலை வெடிப்பு விவகாரம்!!!

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

 

போபால் தலைநகரில் கடந்த 1984 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட அணுவுலை வெடிப்பினால் அந்நகரம் முழுவதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அணுவுலை வெடிப்பு ஏற்பட்ட ஒரே நாள் இரவில் சுமார் 3,500 மக்கள் உயிரிழந்தனர். அடுத்த இரண்டு வருடங்களில் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு கிட்டத்தட்ட 25 ஆயிரமாக இருந்தது எனவும் மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது. மேலும் அணுவுலை வெடிப்பினால் வரும் பக்கவிளைவுகள் 2 தலைமுறை மக்களையும் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போபால் அணுவுலை சம்பவத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்றே ஒரு தனி மருத்துவமனை போபால் நகரில் அமைக்கப் பட்டு இருக்கிறது. இந்த மருத்துவமனை தற்போது கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டு விட்டதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டத் தொடங்கி இருக்கின்றனர்.

ஏற்கனவே போபால் அணுவுலை வெடிப்பினால் பாதிக்கப் பட்ட மக்களை அரசாங்கம் கைவிட்டு விட்டது எனத் தொடர்ந்து மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது மருத்துவமனை விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. நோய்வாய்ப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு விஷவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நபர்களை சீர்ப்படுத்துவதற்கு போதுமான கருவிகள் எங்களிடம் இல்லை என்று கைவிட்டு விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போபால் தாக்கத்தில் சம்பந்த பட்ட மக்கள் தற்போது கொரோனா பாதிப்புகளில் அதிகம் உயிரிழந்து வருவதாகவும் அதிர்ச்சியை வெளியிட்டு இருக்கின்றனர். போபால் அணுவுலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிக்கும் போது அவர்களில் 45 பேரில் குறைந்தது 20 பேர் இறந்து விடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், போபால் விவகாரத்தில் தொடர்புடைய 37 விழுக்காட்டு மக்களுக்குத் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற நோயால் பாதிக்கப்படும் மக்களை குணப்படுத்துவதற்கு எந்த மருத்துவமனைகளும் முன்வராதக் காரணத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். போபால் அணுவுலை தொழிற்சாலை அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நிறுவனம் அணுவுலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கியதோடு அதிநவீன மருத்துவமனை ஒன்றையும் உருவாக்குவதாக வாக்கு அளித்து இருந்தது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் இந்த அதிநவீன போபால் மெமோரியல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு. அது கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவிற்கு ஆட்படும்போது நிலைமை மேலும் தீவிரமாகிறது. பேருந்து போன்ற வசதிகள் எதுவும் இல்லாததால் நோய்வாய்ப் பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதிலும் கடும் சிரமம் ஏற்படுகிறது என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டத் தொடங்கியிருக்கின்றனர். அணுவுலை வெடிப்பினால போபால் நகரத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாசக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் போன்ற தீவிர நோய் பாதிப்புகளை கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு வேறுபட்ட சிகிச்சையும் தேவைப்படுகிறது என தனியார் மருத்துவமனைகள் அலைக் கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

More News

சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு

கொரோனா வைரஸ் ஆற்றல் இழந்து வருகிறது!!! மகிழ்ச்சித் தெரிவித்த இத்தாலி விஞ்ஞானிகள்!!!

இத்தாலி, கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும் தற்போது கொரோனா உயிரிழப்புகள் அந்நாட்டில் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

'கண்ணான கண்ணே, நீ கலங்காதே'! விக்னேஷ் சிவன் சொல்வது யாருக்கு?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை

திருமணம் முடிந்தவுடன் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் கொடுத்த பரிசு: கிராம மக்கள் நெகிழ்ச்சி

பொதுவாக திருமணம் செய்யும் புதுமண தம்பதிகளுக்கு திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுகள் கொடுப்பார்கள். ஆனால் கோவை அருகே இன்று நடந்த திருமணத்தில்,

காட்மேன் வெப்சீரீஸ்: காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த 'காட்மேன்' வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது.