பேய் பிடித்தவர்களை குணப்படுத்த, மருத்துவர்களுக்கு புதிய பாடப்பிரிவு..! பனாரஸ் பல்கலைக்கழகம்.

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

பேய் பிடித்தவர்களை குணப்படுத்த மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கும் புதிய பாட பயிற்சி திட்டத்தை பனாரஸ் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

பனாரஸ் பல்கலை கழகம் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று. இது வாரணாசியில் செயல்பட்டு வருகின்றது. வருகின்ற ஜனவரியில் இருந்து ஆறு மாத பயிற்சி வகுப்பாக பேய் பிடித்தவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பயிற்சி திட்டத்தை தொடங்கவுள்ளது.

இந்த பயிற்சி திட்டமானது ஆயுர்வேதா மற்றும் பழங்கால இந்து மத குணப்படுத்தும் முறை பிரிவு ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பூட் வித்யா என்ற சம்ஸ்கிருத பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆவிகளை பற்றி அறிதல் என்று அர்த்தமாகு

ம்.

பேய்கள் இருப்பதாக ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகமே சொல்வதா என்றும், இது மனநோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை முறை மட்டுமே என்றும் வெவேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலாவ தொடங்கியுள்ளன.

More News

பாரதிராஜாவின் 'குற்றப்பரம்பரை' படம் குறித்த முக்கிய தகவல்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் கனவு திரைப்படம் என்று கூறப்படும் 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தின் பூஜை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உசிலம்பட்டி அருகே

இசை ஞானி இளையராஜாவிற்கு கேரள அரசு அறிவித்த புதிய விருது..!

கேரள மாநிலத்தில் ஹரிவராசனம் பாடலின் பெயரில் 2012-ம் ஆண்டு முதல் 'ஹரிவராசனம் விருது' வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, இசைஞானி இளையராஜாவிற்கு விருது வழங்கப்படுகிறது.

முதல்முறையாக இணையும் கவுதம்மேனன் மற்றும் விஷ்ணுவிஷால்!

இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்கிய 'குயீன்' என்ற வெப்சீரிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டிடத்தில் மோதி விமானம் விபத்து: 100 பயணிகளின் கதி என்ன?

கஜகஸ்தான் நாட்டில் 100 பேர்களுடன் சென்ற விமானம் ஒன்று கட்டிடம் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

செல்லாத நோட்டை வைத்திருந்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றம்

கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கமலா அம்மாள் என்ற 92 வயது மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ரூ.31,500 சேமித்து வைத்திருந்தார்.