பேய் பிடித்தவர்களை குணப்படுத்த, மருத்துவர்களுக்கு புதிய பாடப்பிரிவு..! பனாரஸ் பல்கலைக்கழகம்.
- IndiaGlitz, [Friday,December 27 2019]
பேய் பிடித்தவர்களை குணப்படுத்த மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கும் புதிய பாட பயிற்சி திட்டத்தை பனாரஸ் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
பனாரஸ் பல்கலை கழகம் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று. இது வாரணாசியில் செயல்பட்டு வருகின்றது. வருகின்ற ஜனவரியில் இருந்து ஆறு மாத பயிற்சி வகுப்பாக பேய் பிடித்தவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பயிற்சி திட்டத்தை தொடங்கவுள்ளது.
இந்த பயிற்சி திட்டமானது ஆயுர்வேதா மற்றும் பழங்கால இந்து மத குணப்படுத்தும் முறை பிரிவு ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பூட் வித்யா என்ற சம்ஸ்கிருத பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆவிகளை பற்றி அறிதல் என்று அர்த்தமாகு
ம்.
பேய்கள் இருப்பதாக ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகமே சொல்வதா என்றும், இது மனநோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை முறை மட்டுமே என்றும் வெவேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலாவ தொடங்கியுள்ளன.