ஊரடங்கு விடுமுறையில் தமிழ் கற்கும் பிரபல பாலிவுட் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகைகள் பலர் தமிழ் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நிலையில், மொழி தெரியாமல் சில நடிகைகள் கஷ்டப்படுவது உண்டு. அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நிதி அகர்வால் தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் ’பூமி’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ’பூமி’ நாயகி நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்று வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தின் மூலம் அவர் தமிழை கற்று வருவது குறித்தும், தமிழ் வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி தங்கிலீஷ் மூலம் தமிழ் கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழில் பேசுவதற்கு தேவையான முக்கியமான வார்த்தைகளை அவர் கற்று வருவதால் விரைவில் அவர் சரளமாக தமிழ் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி, நிதி அகர்வால், ரோனித் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யாபொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘பூமி’ படத்தை லட்சுமண் இயக்கி வருகிறார். டி.இமான் இசையில் டட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Learning a new language.. can you guess which one pic.twitter.com/ryYkuFSCOf
— Nidhhi Agerwal (@AgerwalNidhhi) May 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments